நமக்கு உடம்பு சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்கிறோம். மருத்துவர்கள் நமக்கு மருந்து, மாத்திரை கொடுத்துச் சிகிச்சை செய்கிறார்கள். காட்டில் வாழும் விலங்குகளுக்கு, உடம்பு சரியில்லை என்றால் எங்குப் போகும்?
எனவே விலங்குகளுக்குச் சிகிச்சை செய்ய, சில பறவைகள் கூடி மருத்துவமனை ஒன்றைத் துவங்குகின்றன. உண்ணிகளால் அவதிப்படும் காட்டு எருமைக்கு உண்ணிக்கொக்கு சிகிச்சை அளிக்கிறது. அதற்கு அடுத்து வரும் காண்டாமிருகத்துக்கு, உண்ணிக்கொத்தி சிகிச்சை அளிக்கிறது. முதலைக்கு உப்புக்கொத்திப் பறவை சிகிச்சை அளிக்கிறது.
பூச்சிகளைக் கட்டுப்படுத்த பறவைகள் எவ்வளவு அவசியம் என்பதை இக்கதை விளக்குகிறது. மேலும் காட்டில் விலங்குகளும், பறவைகளும் ஒன்றுக்கொன்று உதவி செய்து, இணைந்து வாழும் விதத்தைச் சிறுவர்கள் அறிந்து கொள்வார்கள்.
இந்நூலின் பின் பகுதியில், இக்கதையில் வரும் பறவைகளின் வண்ணப்படங்களும், அவற்றைப் பற்றிய விபரங்களும், இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு இயற்கையில் நாட்டம் ஏற்படுத்தவும், சில பறவைகளை அறிமுகப்படுத்தவும் இந்நூல் உதவும்.
வகை | மொழிபெயர்ப்புச் சிறுவர் கதை |
ஆசிரியர் – ஆங்கிலம் தமிழாக்கம் | லின் சாங்யிங் ஆதி வள்ளியப்பன் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 45/- |