நடனமாடும் யானைக்குட்டி

யூரி யார்மிஷ் என்பவர் எழுதிய உக்ரேனிய கதையிது. ஆங்கிலம் வழியே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வழ வழ தாளில் பெரிய எழுத்தில் வண்ணப்படங்கள் நிறைந்த நூல். குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்ற நூல். 

ஒரு விலங்குக்காட்சி சாலையில் உள்ள ஒரு யானைக்கு, நடனம் ஆட ஆசை. பக்கத்தில் அமைந்து இருந்த நடனப்பள்ளியில் இருந்து கேட்கும் பாட்டுக்கு நடனம் ஆட விரும்புகிறது. தன் குஞ்சுகளுக்கு நடனப்பயிற்சி கொடுக்கும் நெருப்புக்கோழி, யானைக்குட்டிக்கு நடனம் சொல்லிக் கொடுக்க மறுக்கிறது.

சர்க்கஸ் கம்பெனி வைத்திருந்த ஒருவர் அந்த யானைக்குட்டியைக் கொண்டு போய் நடனம் ஆட பயிற்சி கொடுக்கிறார். ஒரு நாள் மக்கள் முன்னிலையில் யானைக்குட்டி ஒரு காட்சியில் பங்கேற்று நடனம் ஆடுகிறது. அது எப்படி ஆடியது? மக்கள் அதன் ஆட்டத்தை ரசித்தார்களா? என்றெல்லாம் அறிந்து கொள்ளக் கதையை வாங்கி வாசியுங்கள்.

வகை –மொழிபெயர்ப்புச் சிறுவர் கதை
ஆங்கிலம்
தமிழாக்கம்
லிலியா டிடார்
சரவணன் பார்த்தசாரதி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 9444960935
விலைரூ 45/-
Share this: