ஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி!

Odivaa_pic

குழந்தை பிறந்தவுடனே, தாலாட்டைக் கேட்டுத் தான் தூங்குகிறது. அதற்குப் பிறகு, ‘நிலா! நிலா! வா வா! என்று நிலாவைப் பாடி அழைத்துச் சோறு ஊட்டுகிறோம். குழந்தைப் பருவத்தில் எதையும் பாடலாகச் சொல்லும் போது, எளிதில் புரிந்து கொள்கிறார்கள். புதிய சொற்களை எளிதாகக் கற்றுக் கொள்ளவும், திருத்தமாக உச்சரிக்கவும், பாடல்கள் அவர்களுக்கு உதவுகின்றன. எனவே சிறார் இலக்கியத்தில், குழந்தைப் பாடல்களின் பங்களிப்பு, மிகவும் அவசியம்.

‘ஆலோலங்கிளி தோப்பிலே’ என்ற பாடலிலிருந்து, சில வரிகள்:-

‘வண்ண வண்ணப் பொம்மை’ என்ற பாடலிலிருந்து சிலவரிகள்:-

……..

நேரு, பாரதி, கலாம், காமராஜர், தெரஸா போன்று, குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள் குறித்த பாடல்களும், மரம் வளர்ப்பு குறித்த சூழலியல் பாடல்களும், இக்காலத்துக்கேற்ற புதிய பாடுபொருள்களும் இதில் உள்ளன.    

முகம் பார்க்கும் கண்ணாடியில் தொடங்கும் பாடல், தொலைநோக்குக் கண்ணாடியில் முடிகிறது. ‘டிரிங்க் டிரிங்க் செல்போனு’ பாடலும், இத்தொகுப்பில் உள்ளது.

வகைகுழந்தைப் பாடல்கள்
ஆசிரியர்மோ.கணேசன்
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 9444960935
விலைரூ 50/-

சிறுவர் பாடல்கள்

Share this: