நீல தேவதை

Neela_Thevathai_pic

இது மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தை எழுத்தாளர் ரமணா எழுதிய சிறுவர் கதைத் தொகுப்பு. இதில் 5 கதைகள் உள்ளன. நூலின் தலைப்பான ‘நீலதேவதை’ முதல் கதை. தாமஸ் என்பது ஒரு ரயில்வண்டி. ‘மொய் மொய்’ என்ற ஈயும், வானமும் அவன் நண்பர்கள். ஒரு நாள் நண்பர்கள் இல்லாமல், தனியே போன தாமஸுக்கு, நீலதேவதை துணையாக வருகின்றது.

‘பிங்கு’ என்பது இரண்டாவது கதை. பிங்குவும் டிங்குவும் பென்குயின்கள். ஒரு நாள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற பிங்கு என்ற அப்பா பென்குயின் திரும்பி வரவில்லை. அதற்கு என்ன ஆனது? என்பது மீதிக்கதை.

‘தேவையில்லாத போர்’ என்பது மூன்றாம் கதை. தலைப்பே கதையைச் சொல்கிறது. பழங்களும் காய்கறிகளும் தேவையில்லாமல் போரில் ஈடுபட்டு நசுங்கி அழிகின்றன.  போர் என்றால் இருதரப்பிலும் நாசம் ஏற்படும் என்பதை இந்தச் சின்ன வயதிலேயே புரிந்து வைத்திருப்பது வியப்பு! செர்ரி பழத்தைப் போரில் வீசும் குண்டாகவும், முருங்கைக்காயைக் கத்தியாகவும் கற்பனை செய்திருப்பது அருமை!

நாலாவது கதை ‘கருப்புநிறப்பூ’!  ‘தாமரை ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது?’ என்பதைக் கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஐந்தாவது கதையான ‘இயற்கை இளவரசன்’, நல்ல நகைச்சுவை கலந்த கதை.

குழந்தைக்கே உரித்தான விசித்திர கற்பனையோடும், நல்ல நகைச்சுவை கலந்தும் எழுதியுள்ள குட்டி எழுத்தாளருக்குப் பாராட்டுகள்!  

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்ரமணா
வெளியீடுவானம் பதிப்பகம்,சென்னை-89 +91 9176549991
விலைரூ 30/-

Share this: