நாலுகால் நண்பர்கள்

Naalu_Kal_pic

சுபியும் அபியும் அக்கா தங்கை. அவர்களுக்குச் சிங்கப்பூரிலிருந்து அவர்களுடைய மாமா விலங்குகள் ஓவியம் போட்ட இரண்டு டீஷர்ட்டுகளைப் பரிசாக அனுப்பினார்.  அந்தச் சட்டைகளைத் துவைத்தவுடன் அதிலிருந்த விலங்கு ஓவியங்கள் மாயமாய் மறைந்துவிடுகின்றன. திடீரென்று அவை உயிர் பெற்று, அளவில் மிகச் சிறியதாக அவர்களுடைய கட்டிலுக்கு அடியில் வந்துவிடுகின்றன.  அபியும் சுபியும் இந்த நாலு கால் நண்பர்களுடன் என்ன செய்தார்கள் என்பதே இதன் கதை.  வித்தியாசமான கதைக்கருவை எடுத்துக் கொண்டு, சுவாரசியமாகக் கதை சொல்லியிருப்பது சிறப்பு. 

அவசியம் இப்புத்தகத்தை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்அனுக்ரஹா கார்த்திக்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் +91 8778073949
விலை₹ 25/-.
Share this: