அத்தினிக்காடு

Athini_kadu_pic

இதில் 15 கதைகள் உள்ளன.அத்தினிக்காடு என்பதில் அத்தினி என்பதன் பொருளை இன்று தான் தெரிந்து கொண்டேன்.  நீங்களும் புத்தகம் வாங்கி வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அத்தினிக்காடு, மஞ்சள் காடு, மூங்கில் காடு, பிருந்தாவனம், முல்லை வனம் என நிறைய காடுகள் இக்கதைகளின் களனாக இருப்பதால், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நாய்க்குட்டி,பூனைக்குட்டி, சிங்கம்,யானை, வாத்து,புறா,பட்டாம்பூச்சி, கொசு போன்ற உயிரினங்களே முக்கிய பாத்திரங்களாக இடம்பெற்றிருக்கின்றன. 

கொரோனா பற்றிய கதையில் அப்பா வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்து ஒன்றாக உணவருந்தியதாலும், விளையாடியதாலும் நோய் பயம் போய் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது என்று வாசித்த போது, குழந்தையின் மனநிலையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.

இயற்கையைக் காக்க வேண்டும்; பிற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பது பெரும்பாலான கதைகளின் கருவாக அமைந்திருப்பது சிறப்பு. எல்லாக் கதைகளுக்கும் குழந்தைகளே மிகச் சிறப்பாக ஓவியம் வரைந்திருக்கிறார்கள்!

அவசியம் குழந்தைகளுக்கு இந்நூலை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்:-ச.ச.சுபவர்ஷினி
வெளியீடு:-லாலிபாப் சிறுவர் உலகம்,சென்னை-18. செல் +91 98412 36965.
விலை₹ 99/-

Share this: