பல்லி – ஓர் அறிவியல் பார்வை

Palli_pic

நம் வீடுகளில் நம்முடனே வாழும் பல்லி குறித்து எத்தனை வியப்பான அறிவியல் செய்திகள்? பல்லிக்கு இமைகள் இல்லை; பல்லியின் கால் பாதங்களில் 14000 க்கும் மேலான நுண்ணிய காற்றுப்பைகள் உள்ளன; இவற்றை உறிஞ்சு குழல்கள் போல் பயன்படுத்தி, சுவரில் ஒட்டிக்கொள்கின்றன போன்ற பலர்க்கும் தெரியாத செய்திகளை இந்நூலை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பல்லியை அடிப்படையாக வைத்து நம் மக்களிடையே புழங்கும் மூடநம்பிக்கைகள் அனைத்தும் தவறு என்று இதில் ஆசிரியர் எடுத்துக்காட்டு தந்து விளக்கியுள்ளார். நம் மனப்பாடக்கல்வி முறைக்கும், அறிவியல் மனப்பான்மையோடு மாணவர்கள் அன்றாட நிகழ்வுகளை அணுகுவதற்கும் உள்ள நீண்ட இடைவெளியையும் ஆசிரியர் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பல்லி பற்றிய உண்மை செய்திகளை அறிந்து கொள்ளவும், அது பற்றிய மூட நம்பிக்கைகளைக் களையவும், சிறுவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

வகைஇயற்கை கட்டுரை
ஆசிரியர்கோவை சதாசிவம்
வெளியீடுகுறிஞ்சி பதிப்பகம், 4/610, குறிஞ்சி நகர், வீரபாண்டி(அஞ்சல்) திருப்பூர் – 641605 செல் +91 99650 75221.
விலை₹ 30/-
Share this: