முனைவர் கிருங்கை சேதுபதி

Kirungai_Sethupathi_pic

புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கிருங்கை சேதுபதி, அரசு கல்லூரியொன்றில் தமிழ்த்துறையின் துணைப்பேராசிரியராகப் பணி புரிகிறார்.  கவிஞர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத்திறமை கொண்ட இவர், சிறார் இலக்கியத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளார்.

இவரது ‘சிறகு முளைத்த யானை’ என்ற குழந்தைப்பாடல்கள் நூல், 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமியின் சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருதை’ வென்றது. 

இது தவிர ‘பூந்தடம்’, ‘சிரிக்கும் பனைமரம்’, ‘எறும்பின் கனவு’ என்ற குழந்தைப் பாடல் நூல்களையும், இவர் இயற்றியுள்ளார்.   ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’, ‘ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை’, ‘பரிசுத் திருநாள்’ என்பன இவர் எழுதிய சிறுவர் கதை நூல்கள். சிறுவர்க்காகச் ‘சிறுவர் கதைக்களஞ்சியம்’ என்ற நூலையும், இவர் தொகுத்துள்ளார்.

Share this: