இவருடைய முழுப்பெயர் மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி என்பதாகும். இவர் எழுத்தாளர், குழந்தைக்கவிஞர், இதழாளர், இசைப்பாடகர் என்ற பன்முகம் கொண்டவர்.
தமிழறிஞர் மணி.திருநாவுக்கரசரிடம் தமிழ் பயின்று, புலவர் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மருத்துவர் தருமாம்பாள் உருவாக்கிய மாணவர் மன்றப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, சிறப்பாகப் பங்காற்றியிருக்கிறார். தர்மாம்பாள் மறைவுக்குப் பிறகு, மாணவர் மன்றத்தின் தலைவர் ஆனார்.
குழந்தைகளுக்காகப் பல பாடல்கள் இயற்றியிருக்கிறார். இவர் எழுதிய ‘முத்துப்பாடல்கள்’ என்ற சிறுவர் பாடல் தொகுப்பு, இந்திய ஒன்றிய அரசின் பரிசைப் பெற்றது. நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ள இவருடைய படைப்புகளை, இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்.
தித்திக்கும் கவிபாடித்
தேன்கதைகள் பல சொல்லும்
சிவமுத்துப் பெருமானே!
செந்தமிழ் போல் வாழியவே!”
என்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, இவரை வாழ்த்தியிருக்கிறார்.