மந்திரக்குடை

Manthirakudai_pic

பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள். மந்திரக்குடை பறக்க மட்டும் அல்ல, பேசவும் செய்கிறது. குடையைத் தவறவிட்டால் மீண்டும் பெறுவதற்கான மந்திரத்தையும் சொல்லித் தருகிறது.

உற்சாகமாய்ப் பறக்கும் தேவி, ஒரே ஒரு தும்மலில் பிடி தளர்ந்து கீழே விழுகிறாள். மந்திரமும் மறந்துபோகிறது. தேவி விழுந்த இடமோ வன விலங்குகள் வாழும் அடர்ந்த காடு. அங்கே சிங்கம், யானை, பாம்பு, குரங்கு, மான், அணில், முயல், பறவைகள், பூச்சிகள் என எல்லா உயிரினங்களும் வசிக்கின்றன. காட்டுக்குள் தேவி என்னென்ன பார்க்கிறாள், காட்டைப் பற்றி என்னென்ன புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறாள் என்பதைச் சுவைபட விளக்குகிறார் ஆசிரியர்.

யானை போகும் வழியிலெல்லாம், கிளைகளை முறித்துப் போடுவது ஏன்? அணில் பழங்களை முழுதுமாகத் தின்னாமல், ஆங்காங்கே கொறித்துப் போடுவது ஏன்? ஆண் சிங்கம் வேட்டையாடுமா? போன்று காடு குறித்தப் பல புதிய தகவல்களை தேவியோடு சேர்ந்து நாமும் தெரிந்து கொள்கிறோம். மனிதர் காலடி படாத காட்டின் அழகை காடுவாழ் விலங்குகளின் வாயிலாகவே சொல்லி யிருப்பது சிறப்பு. மந்திரம் மீண்டும் தேவிக்கு நினைவுக்கு வந்ததா?  அவள் வீடு திரும்பினாளா? என்று அறிந்துகொள்ள கதையை வாசியுங்கள்.

6 முதல் 12 வயது வரையிலான சிறார்க்காக எழுதப்பட்டிருந்தாலும், வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசித்து ரசிக்க, வண்ணப்படங்களுடன் கூடிய சுவாரசியமான சிறுவர் நாவல். 

அமேசான் கிண்டிலில் மின்னூலாகவும் கிடைக்கிறது.

இணைப்பு:- https://www.amazon.in/dp/B09B3P9YFD

வகைசிறுவர் குறுநாவல்
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு  புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18   (+91 8778073949)
விலை₹ 30/-
Share this: