மா.கமலவேலன்

Kamalavelan_M_writer

2010 ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது, மா.கமலவேலன் அவர்கள் எழுதிய ‘அந்தோணியின் ஆட்டுக்குட்டி’ என்ற சிறுவர் நாவலுக்கு வழங்கப்பட்டது. பால புரஸ்கார் விருது பெற்ற முதல் நூல் என்ற பெருமை இதற்குண்டு.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறார் எழுத்தாளர் மா.கமலவேலன் அவர்கள் 1961 முதல் சிறுவர் நூல்களை எழுதிவருகின்றார்.  இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

‘கண்ணன்’, ‘அரும்பு’, ‘கோகுலம்’, ‘சிறுவர் மணி’ ஆகிய இதழ்களில், இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன.  மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இவர், அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக ‘மால்கம் ஆதிசேஷய்யா விருது’ம் பெற்றிருக்கிறார்.

Share this: