குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

Children_day_pic

எல்லாக் குழந்தைகளுக்கும், சுட்டி உலகத்தின் நல்வாழ்த்துகள்!

“வருடம் தவறாமல்

குழந்தைகள் தினத்தைக்

கொண்டாடுகிறவர்களே!

தினங்கள் கொண்டாடுவதை

விட்டு விட்டுக்

குழந்தைகளை எப்போது

கொண்டாடப் போகின்றீர்கள்”

என்பது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை.

குழந்தைகளைக் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்த ஏற்படுத்தப்பட்ட நாள் இன்று! எனவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வெறும் சம்பிரதாயமாகவும், சடங்காகவும் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதை விடுத்து, உண்மையான அக்கறையுடன் கொண்டாடுவோம்! குழந்தைகளை இன்று மட்டுமல்ல, எந்நாளும் கொண்டாடுவோம்!  

குட்டிகளுக்கும், சுட்டிகளுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக் கூறுவதில் மகிழ்கின்றோம்.

வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: