சம்பக் (தமிழ்)

Champak_pic

இது குழந்தைகள் மாத அச்சிதழ். இதன் மண்டல அலுவலகம் டெல்லி பிரஸ், சிசன்ஸ் காம்ளக்ஸ் முதல் மாடி, 2/92 மாண்டியத் சாலை, எழும்பூர், சென்னை 600008 என்ற முகவரியில் இயங்குகிறது.

இதன் தொலைபேசி எண் 044-28554448. விலை ரூ 30/-.

இதன் நவம்பர் 2022 இதழில் 6 கதைகள் உள்ளன. “சிரிங்க சிரிங்க” என்ற பகுதியில், நகைச்சுவை துணுக்குகள் இடம்பெற்றுள்ளன.  குழந்தைகள் வண்ணம் தீட்ட ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.   

“ஒரு புதிய நட்சத்திரம்” என்ற தலைப்பில், விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை கதை இரண்டு பக்கங்களில் வெளியாகியுள்ளது. குழந்தைகள் இதழில் படக்கதை இல்லாமலா? “டமரூவின் வண்டி நிறுத்துமிடம்”, “சீக்கூ”, “தாத்தா மற்றும் குழந்தைகள் தினம்” என்று 3 படக்கதைகள், அழகான வண்ணப் படங்களோடு உள்ளன.

“உங்களுக்குத் தெரியுமா?” என்பதில் விடுகதைகளும், அவற்றுக்கான விடைகளும் உள்ளன.  “அறிவோம் ஆயிரம்” பகுதி அறிவியல் உண்மைகளை எளிய செய்முறைகளால் விளக்கும் பகுதி. படத்தில் மறைந்துள்ள 10 ரோஜா பூக்களைக் கண்டுபிடிக்கச் சொல்லி, ஒரு படம் கொடுத்துள்ளார்கள்.  “வார்த்தை தேடல்” பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை வைத்து, வார்த்தைகளைத் தேட வேண்டும்.

சாலை போக்குவரத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை குழந்தைகளுக்கு விளையாட்டாகச் சொல்லிக் கொடுக்கும் பகுதியும் உண்டு. நவம்பரில் குழந்தைகள் தினம் வருவதால், நவம்பர் இதழை ஒரு டைஜஸ்ட் போலச் சிறப்பாகப் பல்வேறு அம்சங்களுடன், குழந்தைகளைக் கவரும் விதத்தில் வெளியிட்டுள்ளனர்.  

Share this: