பறவைகள் பலவிதம்-21 – கொண்டாலாத்தி

Kondalathi_pic

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம்.

இந்த நீண்ட அலகால் தரையில் நடந்து, மண்ணைக் குத்திக் கிளறிப் பூச்சிப் புழுக்களைப் பிடித்துத் தின்னும். இதன் முக்கிய உணவு பூச்சிகளே. இப்பறவை ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களில் காணப்படுகின்றது. 

இதன் ஆங்கிலப் பெயர் Eurasian hoopoe.  ஊப் ஊப் ஊப் (oop-oop-oop) எனக் குரல் எழுப்புவதால், இதற்கு hoopoe என்று, ஆங்கிலத்தில் பெயர் வந்து இருக்கலாம் என்பது ஒரு கருத்து.  கொண்டை என்ற அர்த்தம் உடைய Huppée என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து, இப்பெயர் வந்து இருக்கலாம் என்பது, இன்னொரு கருத்து. 

இது மரப் பொந்துகளிலும், கட்டிட இடுக்குகளிலும் கூடு கட்டும். பொந்தின் வாய் குறுகலாக இருக்கும். பெண் மட்டுமே அடை காக்கும். 15 முதல் 18 நாட்கள் அடை காக்கும் பெண் பறவைக்கு, ஆண் தீனி கொண்டு வந்து கொடுக்கும்.

அடை காக்கும் சமயத்தில் பெண் பறவை, துர்நாற்றம் வீசக்கூடிய திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவத்தைக் குஞ்சுகளின் இறக்கையில் தடவி விட்டுவிடும். அழுகிய கறியின் நெடி வீசக் கூடிய இந்தத் திரவம், எதிரிகளிடமிருந்து குஞ்சுகளைக் காப்பாற்றுகிறது.   

கொண்டாலத்தி 2008 ஆம் ஆண்டு, இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டது என்பது, கூடுதல் தகவல்.

என்ன சுட்டிகளே! அக்கம் பக்கத்தில் கொண்டாலாத்தி பறவையைப் பார்த்தால், உங்களால் அடையாளம் தெரிந்து கொள்ள முடியும் தானே?

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *