திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சொந்த ஊராகக் கொண்ட கார்த்திகா கவின்குமார், திருச்சியில் வசிக்கிறார். பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தற்போது இணைய வழியில் உலகளவில் வெளிநாடுவாழ் மாணவர்க்கும், பரதநாட்டியக் கலைஞர்க்கும், தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்பித்து வருகிறார். தொல்காப்பியம், சங்க இலக்கிய, இலக்கணம் ஆகியவற்றில் தேர்ந்தவர்.
இவர் தொல்லியல் களச் செயற்பாட்டாளர். ஈனில் இலக்கிய அமைப்பின் நிறுவனர். தமிழ்நாடு மாநில சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் துணைப் பொருளாராகவும், திருச்சி மாநகரக் கிளையின் செயலாளராகவும் இயங்கி வருகிறார்.
‘அகப்பை முகங்கள்’, ‘புறநானூறு உரை’, ‘தொல்காப்பிய உரை’, ‘ஆமை அத்தை… ஆமை அத்தை’ (சிறார் பாடல்கள்), ‘கேக்கின் பிறந்தநாள்’ (சிறார் நாவல்) உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.