பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற படைப்புகள் (2010-2024)

Balasahithya_pic

1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி, 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘பாலபுரஸ்கார் விருது கொடுக்கப்படுகின்றது.

விருது வென்ற நூல்களில் இருந்து மாதிரிக்குச் சில பாடல்களும், பத்திகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல்களில் இடம் பெற்றிருக்கும் சிறார் சிறுகதைகளைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் நாவல்களின் கதைக்கரு பற்றிய அறிமுகம் ஆகியவை குறித்து இக்கட்டுரைகள் பேசுகின்றன.

இந்நூலுக்கு மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய முன்னுரையில், “ஒவ்வொரு கட்டுரையும் கதாசிரியரைப் பற்றிக் கூறுகிறது. உள்ளடக்கத்தை விவரித்து, விருதிற்குரிய நூலின் தகுதியைத் தொட்டுக் காட்டுகிறது. சிறார்களுக்கு இந்நூல் எவ்வகையில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை முத்தாய்ப்பாகக் கூறுகிறது” என்று கூறியிருக்கிறார்.

வகைகட்டுரைகள்
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18 +91 8778073949.
விலைரூ100/-
Share this: