காலநிலை மாற்றம்: செய் அல்லது செத்துமடி

காலநிலை_மாற்றம்

காலநிலை மாற்றம் என்பது மனித குலத்துக்கு, ‘வாழ்வா சாவா?’ என்பதை நிர்ணயிக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. மனிதர்கள் இயற்கையை அழித்ததன் விளைவாக, வாழ்வாதார அமைப்புகள் முற்றிலுமாகச் சீர்குலைந்து சிதையத் தொடங்கி விட்டன.  இதன் வெளிப்படையான அறிகுறி தான், இந்தக் காலநிலை மாற்றம். வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அளவு அதிகமாவதே, புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம்.

பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (ஐபிசிசி) அமைப்பு குறித்தும், அதன் மதிப்பீட்டு அறிக்கைகள் குறித்தும் இரண்டு கட்டுரைகள் விளக்குகின்றன. இந்தக் காலநிலை மாற்றத்தினால் இந்தியாவுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படும்? அதன் தீர்வுகள் யாவை? என்று ஒரு கட்டுரை விளக்குகிறது.

2021ல் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்த 26வது பருவநிலை மாநாட்டில் தமது பேச்சால் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி வினிஷா குறித்தும், இந்நூலில் தெரிந்து கொள்ள முடிகிறது.

புவியில் நம் மனிதகுல வாழ்வுக்குப் பெரும் சவாலாக இருக்கும் காலநிலை மாற்றம் குறித்து, நம் இளையதலைமுறை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்; அதற்கு இந்நூல் பெரிதும் துணை செய்யும்.  12 வயதுக்கு மேற்பட்டோர் வாசிக்கக் கூடிய நூல்.

வகைசிறுவர் கட்டுரை நூல்
ஆசிரியர்ஆதி வள்ளியப்பன்
வெளியீடு:-பாரதி புத்தகாலயம், சென்னை-18.  8778073949.
விலைரூ 45/-
Share this: