காயத்ரி வெங்கடாசலபதி

writer photo

காயத்ரி வெங்கடாசலபதி மதுரைக்கு அருகிலுள்ள சாத்தூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர்.  கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றவர். தற்போது இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் நகரில், தம் கணவரோடும் இரு குழந்தைகளோடும் வசிக்கும் இவர், கணினி மென்பொறியாளாராகப் பணி செய்கிறார். இளம்வயதில் துவக்கத்தில் தினமலர் இணைப்பான சிறுவர்மலர் வாசித்து வாசிப்பில் ஈடுபாடு ஏற்பட்டதாகக் கூறும் இவர் இதுவரை மூன்று சிறார் படக்கதைகளை எளிய ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.  

வாசிப்பு, எழுத்து மட்டுமின்றிக் கலைப்பொருட்கள் செய்வதிலும், குழந்தைகளுக்கு விதவிதமான பிறந்தநாள் கேக் தயாரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். சிறுவயதிலேயே வாசிப்புப் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்குப் படைப்புத்திறன் மேம்படும் என்பது இவர் நம்பிக்கை.  

Share this: