அப்புசிவா

படைப்பாளர் படம்

தனியார் துறையில் மார்க்கெட்டிங் பிரிவில் பணி செய்யும் இவர், சேலம் ஆத்தூரில் வசிக்கிறார். வாசிப்பு, எழுத்து, ஓவியம் வரைதல், ஒளிப்படக்கலை எனப் பன்முகத் திறமை கொண்டவர்.   

புதுமைப்பித்தன், ஜானகிராமன், சுந்தர ராமசாமி ஆகியோரது எழுத்துக்களை விரும்பி வாசிக்கும் இவர், அமேசான் கிண்டிலில் மூன்று சிறார் மின்னூல்களை வெளியிட்டிருக்கிறார்.  இது தவிர ஒரு கவிதை, சிறுகதை ஆகியவை தலா ஒரு தொகுப்பும், ஒரு நாவலும், ஒரு நகைச்சுவை குறுநாவலும் அமேசான் கிண்டிலில் மின்னூல்களாக வெளியிட்டிருக்கிறார்.  அச்சில் இரண்டு நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. பிரதிலிபி, சங்கமம் ஆகிய தளங்களிலும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

ஓவியம் வரைவதில் டிராஸ்கி மருதுவை மானசீக குருவாக ஏற்றிருக்கும் இவர், பூஞ்சிட்டு குழந்தைகள் மாத மின்னிதழில், ஓவியராகச் சிறப்பாகப் பங்களிக்கிறார். 

Share this: