ஐந்தாம் வகுப்பு படிக்கும் அபிக்கு, அவள் ஆசிரியை ரேவதி மிஸ்ஸை மிகவும் பிடிக்கும். ஆசிர்யை ஒரு நாள் எல்லாரையும் வகுப்பில் கவிதை எழுதச் சொல்கிறார். அபி எழுதிய கவிதையை ஆசிரியை பாராட்டுகிறார். மறுநாள் அவள் கவிதை எழுதி வைத்திருந்த தாள் காணாமல் போகின்றது. அதை யார் கிழித்திருப்பார்கள் என்று ஆசிரியை விசாரணை செய்கிறார். கிரி கிழித்த்தைத் தான் பார்த்த்தாகச் சுந்தர் சொல்கிறான் ஆனால் அவன் இல்லையென்று மறுக்கிறான். யார் அதைச் செய்தார்கள்? அதைச் செய்வதற்குக் காரணமென்ன? என்று தெரிந்து கொள்வதற்குக் கதையை வாசியுங்கள்.
வாசிப்பதற்குச் சுவாரசியமான சிறுவர் கதை.
வகை | சிறுவர் கதை (மின்னூல்) |
ஆசிரியர் | S. அகிலாண்ட பாரதி |
வெளியீடு இணைப்பு | அமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B084R5ZQVC |
விலை | ₹ 49/- |