ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு பையன். அண்ணன் மோகனோ பொறுமைசாலி; பொறுப்பானவனும் கூட. ரகு கீழே விழுந்து அடிபட்டதால், ஒரு வாரம் பள்ளி செல்ல முடியவில்லை. அந்த வாரம் பள்ளியிலிருந்து நண்பர்கள் அனைவரையும் சினிமா அழைத்துச் செல்வதாக இருந்தது. தான் போகமுடியவில்லையே என்று ரகுவுக்கு வருத்தம்.
அண்ணன் வீட்டிலேயே அட்டைப் பெட்டியைக் கொண்டு சினிமாப் பெட்டி தயாரித்துப் படம் காட்டி, தம்பியின் வருத்தத்தைப் போக்க முயல்கிறான். என்னென்ன பொருட்களைக் கொண்டு, சினிமாப் பெட்டி தயார் செய்தான்? அதன் மூலம் எப்படிப் படம் காட்டினான்? என்று தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள். நீங்களும் வீட்டிலேயே இது போல் செய்யக் கற்றுக் கொண்டு அசத்தலாம் .
குழந்தைகளுக்குப் போரடிப்பது நல்லது; அது அவர்களின் படைப்புத் திறனைத் தூண்டும் என்பதற்கு, இக்குறுங்கதை நல்ல சான்று.
வகை | சிறுவர் கதை (மின்னூல்) |
ஆசிரியர் | அப்பு சிவா |
வெளியீடு இணைப்பு | அமேசான் கிண்டில் https://www.amazon.in/dp/B08738M59V |
விலை | ₹ 49/- |