வேலூரைச் சேர்ந்த துரை ஆனந்த் குமார் அபுதாபியில் பணிபுரிகிறார். 2018ஆம் ஆண்டு முதல் சிறுவர்க்குக் கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழுவை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுச் செயலாற்றுகின்றார். ‘KIDS TAMIL STORIES’ என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளர்.
‘கெட்டிக்காரக் குட்டித் தவளை’ 1 & 2, ‘இதுவும் கடந்து போகும்’, ‘ச்சூ மந்திரக் காடு’, ‘இரண்டாம் மெட்ராஸ்’, ‘நீலக்கழுகு’, ‘மாயத்தூக்கம்’, ‘ரோஸ்லினும் ரோஜாப்பூவும்’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். ‘பேனா பிடித்த நட்சத்திரங்கள்’, ‘போட்டி இல்லை;வானமே எல்லை’, ‘கதை வண்டி’, ‘கதைக்கும் நட்சத்திரங்கள்’ ஆகிய நான்கு சிறார் நூல்களைத் தொகுத்திருக்கிறார்.