உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள் தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை சொல்லும். கதை முடிந்த பிறகு உயிர் பெற்ற அந்தப் பொம்மையைக் கோலினால் தட்டினால், மீண்டும் அது பொம்மை ஆகிவிடும்.
“உயிர் பெற்ற பொம்மையை, மீண்டும் பொம்மையாக்காமல் விடக் கூடாது; இல்லையேல் உன் உயிருக்கு ஆபத்து!” என்று தேவதை உமாவை எச்சரிக்கிறது. ஆனால் ஒரு நாள் டிரெக்ஸ் டைனோசர் பொம்மைக்கு உயிர் உண்டாக்கிய உமா, அதை மீண்டும் பொம்மையாக்க மறந்து தூங்கிவிடுகிறாள். முடிவு என்ன ஆனது? தன்னைத் தாக்க வந்த டைனோசரிடமிருந்து உமா தப்பித்தாளா? என்பதை விறுவிறுப்புடனும், சுவாரசியமாகவும் இந்நாவல் விவரிக்கிறது.
கதைக்குள் கதை என்ற பாணியில் அமைந்த நாவலிது. 6-12 வயது குழந்தைகளுக்கு ஏற்றது. செம்மையான வடிவமைப்புடன் அமைந்த இந்நாவலை அவசியம் வாங்கிக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்!
வகை | சிறார் நாவல் |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு:- | வானம் பதிப்பகம், சென்னை-89 செல் +91 91765 49991 |
விலை | ரூ 50/- |