சுட்டிப் பேச்சு (ஆகஸ்ட் 2021)

chutti talk feature image

அம்மா – “மாடு எப்படி கத்தும்?”

சுட்டி (2 வயது) – “ம்..மா…”

அம்மா – “ஆடு எப்படி கத்தும்?”

சுட்டி – “ம்..மே…”.

அம்மா – “கோழி எப்படி கத்தும்?”

சுட்டி – “கொக்கரக்கோ…”

அம்மா – “காக்கா எப்படி கத்தும்?”

சுட்டி – “கா..கா…”

அம்மா – “நீ எப்படி கத்துவே?”  (ஆ…. என்ற பதிலை எதிர்பார்க்கிறார்)

சுட்டி – “நா எப்புடி வேணாலும் கத்துவேன்”.

அம்மா – 😶😶😶


சுட்டி (2 வயது) (ஒருநாள் ஜன்னலோரம் நின்றுகொண்டு) – “காப்பாத்துங்க… காப்பாத்துங்க.. என்னக் காப்பாத்துங்க…”

அம்மா  – “ஏம்மா கத்துறே… என்னாச்சு?”

சுட்டி-  “அம்மா, நேத்து ஒரு கதை சொன்னீங்கல்ல, அதுல ஒரு பாப்பா அம்மா சொன்ன பேச்சு கேக்காம போய், காணாப் போயிடும்ல… அது ஒரு எடத்துல மாட்டிகிட்டப்போ, இப்படி தானே கத்தி காப்பாத்த சொல்லும். நானும் அது மாதிரி மாட்டிக்கிட்டா, இப்படி கத்துனா காப்பாத்த யாராவது வராங்களான்னு பாக்கதான் கத்துறேன்”.

அம்மா- 🙃🙃🙃


சுட்டி (2 வயது) அழுதுகொண்டே – அம்மா… நெத்தம் (ரத்தம்) வருதும்மா.. கையில நெத்தம் வருதும்மா

சுட்டியின் விரலில் கீற்றாய் சிவப்பு நிறம்.

சுட்டி – நொம்ப வலிக்குதும்மா.. நொம்ப நொம்ப வலிக்குதும்மா..

அம்மா உற்றுப் பார்த்துவிட்டு – பாப்பா.. இது ரத்தம் இல்ல.. சிவப்பு ஸ்கெட்ச்  பேனா. நீ படம் வரையும்போது விரல்ல பட்டிருக்கு.

சுட்டி – அது நெத்தம் இல்லையா.. அப்ப எனக்கு வலிக்கலம்மா..

(சிரித்துக்கொண்டு மறுபடியும் விளையாட்டைத் தொடர ஓடிவிட்டது)

அம்மா – 😆😆😆

Share this: