புக்ஸ் ஃபார் சில்ரனின், புதிய சிறார் வாசிப்பு நூல்கள்

cover photo of five new books

அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய வீட்டுக் குழந்தைகள் சுயமாய் வாசிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், 21/07/2023 அன்று, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, வாசிப்பு இயக்கத்தைத் துவங்கியுள்ளது.

இதன் முதல் கட்டமாக, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, 53 கதைப் புத்தகங்களை அச்சிட்டு, முன்னோட்ட ஆய்வுக்காக சில பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. 16 பக்கங்களில் ஒரே ஒரு கதை கொண்ட இந்தக் கதைப் புத்தகங்கள் குழந்தைகளின் வாசிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்டு நுழை, நட, ஓடு, பற என நான்கு நிலைகளில் உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு வாசிப்பில் ஈர்ப்பை ஏற்படுத்தும் விதத்தில், பல வண்ணப்படங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூல் ஒவ்வொன்றிலும், கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இரண்டு கதைகள் உள்ளன. இரண்டு மூன்று வார்த்தைகள் மட்டுமே கொண்ட சின்ன வாக்கியம், குழந்தைகளுக்குத் தெரிந்த எளிய சொற்கள், ஒரே சொற்கள் கதையில் மீண்டும் மீண்டும் வருதல் ஆகியவை, இந்நூலின் சிறப்பு அம்சங்கள்.

மிக எளிமையான மொழியில் அமைந்திருப்பதால், வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் இவை ஏற்றவை. எல்லாக் கதைகளுமே வேடிக்கை நிறைந்து, வாசிக்கும் குழந்தைகளுக்கு ஃபன் என்று சொல்லப்படுகிற மகிழ்ச்சியைக் கொடுப்பவை.

கிடைக்கும் இடம்:- புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்,

சென்னை-18. செல் +91 8778073949.

ஆசிரியர்:- ஞா.கலையரசி

Chuttisundeli_pic

தூங்குவது போல் நடித்துச் சுண்டெலியைப் பிடிக்க நினைத்த பூனையைச் சுட்டிச் சுண்டெலி எப்படி ஏமாற்றுகிறது என்பது முதல் கதை. காட்டில் மந்திரக்கோலை வைத்துச் சிங்கத்தை வாத்தாகவும், யானையைச் சேவலாகவும் மந்திரவாதி மாற்றி விடுகிறான். விலங்குகள் பழைய உருவத்தை எப்படிப் பெற்றன என்பதை, 2வது கதை சொல்கிறது. குழந்தைகளுக்கு அவசியம் வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.

ஆசிரியர்:- மு.முருகேஷ்

Sirippuraja_pic

சிரிசிரி சிங்கம், கடுகடு சிங்கமாக மாறியது ஏன்? அது ஒளித்து வைத்த சிரிப்புப் பை, எங்கே போனது? குட்டி யானை கோகிலா எங்கே? குட்டிக் குரங்கு குமரன், கோகிலாவை விழுங்கி விட்டதா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இக்கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

ஆசிரியர்கள்:- பிரியசகி & பேராசிரியர் .ச.மாடசாமி

Namnam_pic

ஆசிரியர் வகுப்புக்குக் கொண்டு வந்த புத்தகத்தில், அப்படி என்ன சிறப்பு? மாணவர்கள் அதை வாசிக்க, அளவிலா ஆர்வம் காட்டியது ஏன்? வாசித்து முடித்த மாணவர்களின் எதிர்வினை என்ன? வானவில் எதனால் அழகு? ஆந்தை துரத்தியவுடன், அம்மாவைப் பிரிந்த குட்டி வவ்வால், எங்கே போனது? என்றெல்லாம் தெரிந்து கொள்ள, இக்கதைப் புத்தகத்தை வாங்கி வாசிக்கக் கொடுங்கள்.

ஆசிரியர் சாலை செல்வம்.

Kalapattiyum_pic

கலா பாட்டி பேத்தி நிலாவுக்கு, என்ன கதை சொன்னார்? பேத்தி பெரியவள் ஆனதும், பாட்டிக்கு என்ன கதை வாசித்தாள்? அது பாட்டிக்குப் புரிந்ததா? கண்ணம்மாவின் விதவிதமான சத்தங்கள் யாவை? என்றெல்லாம் தெரிந்து கொள்ள இக்கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

ஆசிரியர்கள்:- புவனேஸ்வரி & மோ.கணேசன்

Meeninazhugai_pic

மீன் ஏன் அழுதது? குளத்துக்கு ஏன், தண்ணீர் வரவில்லை? சிறுவர்கள் மீனுக்கு எப்படி உதவினார்கள்?  காக்கா முயல்கள் மீது, ஏன் வழக்கு போட்டது? முயல்களின் வக்கீல் சிங்கம், காக்கா மீது என்ன குற்றம் சுமத்தியது? நீதிபதி கரடி சொன்ன தீர்ப்பு என்ன? என்றெல்லாம், தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி, வாசியுங்கள்.

இந்த நூல்கள் உங்கள் குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தி, தொடர்ந்து வாசிக்க ஊக்குவிக்கும்.

Share this: