இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர், 1922 ல் கனடாவில் பிறந்தவர். இவரது புகழ் பெற்ற நூல், Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகித கொக்குகளும்) 1977 ல் வெளியாகி, 15 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றது.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஹிரோஷிமா மீது, அமெரிக்கா வீசிய அணுகுண்டின் கதிர்வீச்சின் காரணமாக, சடாகோ சசாகி எனும் சிறுமி இரத்தப் புற்றுநோய்க்கு ஆளானாள். ஆயிரம் காகித கொக்குகள் செய்தால், நீண்ட நாள் வாழலாம் என்ற ஜப்பானியரின் நம்பிக்கையின்படி, அவள் ஆயிரம் கொக்குகள் செய்ய முயல்கிறாள். அவள் செய்து முடித்து நீண்ட நாள் வாழ்ந்தாளா? என்பதைக் கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஹிரோஷிமா அமைதிப்பூங்காவில், சடாகோவுக்கு ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளதாம். ஒவ்வோர் ஆண்டும், அமைதி நாளின் போது, காகிதக் கொக்கு மாலையை, அச்சிலைக்குக் குழந்தைகள் சமர்ப்பிக்கிறார்களாம். மனித இனத்தைக் கொன்று குவிக்கும் போர் ஒழிந்து, பூவுலகில் அமைதி நிலவ வேண்டும், என்ற கருத்தை வாசகர் மனதில் விதைக்கும் நூல்.
மனதை மிகவும் நெகிழச் செய்த கதை.
வகை | சிறார் கதை |
ஆசிரியர் | ஆசிரியர்:- எலினார் கோர் தமிழாக்கம்:- ஆதி வள்ளியப்பன் |
வெளியீடு | குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம், கோயம்புத்தூர். 9843472092 / 9605417123. |
விலை | ரூ 50/- |