இத்தொகுப்பில் எட்டுக் கதைகள் உள்ளன. இந்த எட்டில், ஐந்து காட்டில் நடக்கின்ற கதைகள். பலவிதமான மரங்கள், பறவைகள் பெயர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கின்றார், ஆசிரியர். காட்டுக்கு ராஜா சிங்கம் என்ற அரதப் பழசான கதை வழக்கத்துக்கு மாறாக, தேக்கு, பூனை எலி, மரங்கொத்தி, காக்கா எனப் புதுப்புது ராஜாக்கள், கதைகளில் உலவுவது புதுமை. அது போல் மரங்கள் நடமாடுவதும், நல்ல கற்பனை.
‘நீல மரமும் தங்க இறக்கைகளும்’ சிறப்பான கதை. இது நூலின் தலைப்பாக அமைந்தது சிறப்பு. பல கதைகளில் மனிதனால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பேரழிவு குறித்த விழிப்புணர்வுச் செய்தியும், நேரடி அறிவுரையாக இல்லாமல், கதை வழியாகப் பகிரப்படுகின்றது. குழந்தைகளுக்கு இயற்கையின் பால் நேசத்தை ஏற்படுத்தும் நூல்.
அறிவியல், அதீதம், இயற்கை என எல்லாமும் கலந்து, குழந்தைகளை மகிழ்வூட்டும் சிறார் சிறுகதைத்தொகுப்பு.
வகை | சிறார் கதைகள் |
ஆசிரியர் | சரிதா ஜோ |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) |
விலை | ரூ 75/- |