ஒரு காட்டில் நண்பர்களாக இருந்த காண்டாமிருகம், கழுகு, புலி, அணில், குரங்கு, சிங்கம் யானை ஆகிய அனைத்தும், கடலைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை நேரில் பார்க்கும் ஆவலில் ஒன்றாகச் சேர்ந்து கிளம்புகின்றன. யான் என்கிற யானை அவர்களை வழிநடத்திச் செல்கின்றது. வழியில் பப்பு என்கிற கரடிக்குட்டியும், அதன் அம்மாவும் அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றன. கடலுக்குப் போகும் வழி மாறிப் பாலைவனத்துக்குச் சென்று, அங்கு ஒட்டகத்தைச் சந்திக்கின்றன
இறுதியில் பல தடைகளைத் தாண்டி, ஆமைகளின் உதவியுடன் கடலுக்குச் சென்று சேர்ந்து, சூரியன் உதயமாவதையும், மறைவதையும் கண்டு ரசிக்கின்றன. கடலின் பிரும்மாண்டத்தைக் கண்டு மலைக்கின்றன. கடல்வாழ் உயிரினங்களின் அறிமுகமும் கிடைக்கின்றது. இப்பயணத்தின் போது, காட்டு நண்பர் கூட்டம் சந்திக்கும் நண்பர்களும், கிடைக்கும் புதுப்புது அனுபவங்களும் தாம் கதை.
காட்டு நண்பர்களின் கடலை நோக்கிய பயணமும், கடலைப் பற்றிய சுவையான விவரிப்பும் நிறைந்து, குழந்தைகளை மகிழ்விக்கும் நாவல்.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | விழியன் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) |
விலை | ₹ 40/- |