டாலும் ழீயும்

photo of taalum zhiyum book cover

டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள்.  இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம். ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசித்து கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் உணவு முறைகள், மீனவர்களின் வேட்டை உள்ளிட்ட பல விபரங்களைத் தெரிந்து கொள்கின்றன.  அந்நூலிலிருந்த பழைய காலக் கடல் கோட்டையைப் பற்றிய செய்தியை வாசித்தவுடன்,  அது போன்ற கோட்டை ஒன்றைப் புதிதாகக் கட்ட வேண்டும் என்ற ஆசை அவற்றுக்கு வந்துவிடுகின்றது.

இரண்டும் சேர்ந்து அதற்கான திட்டங்களைத் தீட்டுகின்றன   டிகிரோ என்ற ஆக்டோபஸ் வரைபடம் வரைந்து கொடுக்கின்றது.  மூக்காயி என்ற கடல்பசு, கோட்டையைக் கட்டத் துவங்குகிறது.  பிச்சு என்ற சுறாவும், விங்கோ என்ற திமிங்கலமும் சேர்ந்து, கோட்டை கட்ட விடாமல் இடைஞ்சல் பண்ணுகின்றன. தங்க மீன் ழீ ஒரு சிறுவனின் வலையில் வேறு மாட்டிக் கொள்கிறது.  அதிலிருந்து ழீ எப்படி தப்பித்தது? இரண்டும் சேர்ந்து கோட்டையைக் கட்டி முடித்தனவா?  என்று தெரிந்து கொள்ள கதையை வாங்கி வாசியுங்கள்.

விறுவிறுப்பும், சுவாரசியமும் நிறைந்த சிறுவர் கதை.    

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்விழியன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை (+91)8778073949
விலை₹40/-
Share this: