அணிலின் துணிச்சல்

Anilin_pic

ஓர் அணிலுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அண்ணன் அணிலுக்குக் குறும்பு அதிகம். அடிக்கடி வெளியில் தாவுவதும், உள்ளே போவதுமாக இருந்தது.

தம்பியோ பயந்தாங்கொள்ளி. பொந்தை விட்டு வெளியவே வராது. அம்மா அடிக்கடி அதற்குத் தைரியம் சொல்லும். அம்மா அணில் இல்லாத ஒரு நாள், ஒரு பாம்பு தம்பி அணில் இருந்த பொந்தை நோக்கி வந்தது.

அப்புறம் என்ன நடந்தது? தாவியே பழக்கம் இல்லாத தம்பி அணில் அந்தப் பாம்பிடமிருந்து தப்பித்ததா? என்று தெரிந்து கொள்ள, கதையை வாங்கிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள்

வழ வழ தாளில், வண்ணப் படங்கள் நிறைந்து, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வாசிக்க ஏற்ற வகையில் குறைந்த வார்த்தைகளுடன் கூடிய சித்திரக்கதை. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் மகள் உ.நவீனா வரைந்திருக்கும் ஓவியங்கள் அருமை.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 9444960935
விலைரூ 30/-

Share this: