ஒரு பெரிய மரத்தில் இரண்டு இருவாட்சி பறவைகள் கூடு கட்டுகின்றன. பெண் பறவை முட்டையை அடை காக்கிறது. ஒரு ஓட்டை மட்டும் விட்டு விட்டுக் கூட்டை முழுவதுமாக மூடிவிடுகின்றன.
குஞ்சு பொரிக்கும் வரை அடைகாக்கும் பெண் பறவைக்கு, ஆண் பறவை உணவு கொண்டு வந்து அந்த ஓட்டை வழியாகக் கொடுக்கின்றது.
சிறகு முளைத்த பிறகும், குஞ்சு பறப்பதற்குத் தயங்குகிறது. அது எப்படிப் பறக்க கற்றுக் கொண்டது என்பதைச் சொல்லும் கதை.
ஆங்கிலத்தில் அழகான வண்ணப்படங்கள் நிறைந்த சித்திரக்கதை. படங்கள் அதிகமாகவும், வார்த்தைகள் குறைவாகவும் இருப்பதால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கேற்ற கதை.
வகை | சிறுவர் கதை (ஆங்கிலம்) |
ஆசிரியர் | திலிப் குமார் பரூவா |
வெளியீடு | நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா புதுடில்லி |
விலை | ரூ 35/- |