என்ன சொன்னது லூசியானா?

Enna_Lousiyana_pic

இது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதிய கதைத் தொகுப்பு. 2 ஆம் வகுப்பு மாணவி பா.மதிவதனியும், 5 ஆம் வகுப்பு படிக்கும் அவரது அண்ணன் பா.செல்வ ஸ்ரீராமும் எழுதிய 8 கதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

குழந்தைகளின் சிறிய உலகில், அவர்கள் கற்பனைக்கேற்ப சின்னச் சின்ன சிக்கல்களும், அவற்றுக்கான எளிய தீர்வுகளும் கதைகளில் இடம்பெற்றுள்ளன.

பட்டாம்பூச்சியும் எறும்புகளும் கதை ‘இந்தப் பூமி மனிதர்க்கு மட்டுமானதல்ல; எல்லா உயிர்க்கும் சொந்தமானது; மரங்களை வெட்டக் கூடாது’ என்பதை வலியுறுத்துகிறது; ‘கடவுள் உள்ளம்’ எல்லா உயிர்க்கும் அன்பு செய்ய வேண்டும்’ என்கிறது. கதைகளில் கடைசியில் நீதி போதனை இல்லாமல், கதைகளின் ஊடாக இக்கருத்துகள் வெளிப்படுமாறு எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.

“என்ன சொன்னது லூசியானா?” என்ற கதையில், குழந்தைக்குப் புரியும் விதத்தில் பூமி தோன்றிய அறிவியல் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. ‘நாலு தலை வாத்து’ கதையும், புத்திசாலி ஆட்டுக்குட்டி கதையும் வாசிக்க சுவாரசியமாயிருக்கின்றன.

மொத்தத்தில் வாசிக்கச் சுவாரசியமான சிறுவர் கதைத் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள படங்களையும் இவர்களே வரைந்திருப்பது சிறப்பு.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்கள்பா.மதிவதனி & பா. செல்வ ஸ்ரீராம்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 செல் 8778073949
விலைரூ 30/-
Share this: