வேர்க்கடலை இளவரசன்

Verkadalaiilava_pic

புத்தகத் தலைப்பாக அமைந்த, ‘வேர்க்கடலை இளவரசன்’ கதை ஆசிரியரின் சிறந்த கற்பனை வளத்துக்கு, ஓர் எடுத்துக்காட்டு. நீண்ட காலம் தவமாய் தவமிருந்து, அரசி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். மிகவும் குட்டியாகப் பிறந்த குழந்தையை, அரசி வெளியுலகத்துக்குத் தெரியாமல், ஒரு வேர்க்கடலைக்குள் ஒளித்து, வளர்க்கிறாள். ஒரு நாள் அரசி படுக்கையில் இருந்த வேர்க்கடலையைப் பணிப்பெண் எடுத்து நந்தவனத்தில் வீசிவிடுகிறாள். மறுநாள் நந்தவனத்தில், பிரம்மாண்டமான வேர்க்கடலை மரம் முளைக்கிறது. அதற்குப் பிறகு, வேர்க்கடலை இளவரசன் என்னவானான்? அவனது சாகசங்கள் யாவை? என்று தெரிந்து கொள்ள, இக்கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.   

வறுமையில் உழலும், மண் அகல் விளக்கை விற்கும் வியாபாரிக்குத் தீபாவளி கொண்டாட, பணம் எங்கிருந்து கிடைத்தது? அவன் மகள் பள்ளியில் சேர்ந்து படிக்க, யார் உதவினார்கள் என்பதையெல்லாம், ‘என்றென்றும் தீப ஒளி’ என்ற இரண்டாம் கதை, நெகிழ்ச்சியாக விவரிக்கிறது.

வெளியில் போவதை விரும்பாமல், எப்போதும் தொலைக்காட்சி பார்த்துப் பொழுதைப் போக்கும் சோம்பேறி அரவிந்தனுக்கு, மனமாற்றம் ஏற்பட்டதற்கு என்ன காரணம்? பூச்சாண்டி என்பவன் யார்? உண்மையில் பூச்சாண்டி இருக்கிறானா? பொய்க் குற்றச்சாட்டின் காரணமாக, அரசனால் மரண தண்டனை விதிக்கப்படும் விவசாயி, அதிலிருந்து தப்பினானா? பொன்னிக்கு நிலாப் பெண் எப்படித் தோழி ஆனாள்? நிலாப் பெண் கொடுத்த வெண்மதியுடன் சேர்ந்து, பொன்னி செய்த சாகசச் செயல் என்ன? என்பதையெல்லாம், மீதமுள்ள கதைகள் சுவாரசியமாய் விளக்குகின்றன.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்புவனா சந்திரசேகரன்
வெளியீடுபாரதி பதிப்பகம், சென்னை-92 செல் +91 9383982930
விலைரூ115/-
Share this: