பெரிய சாக்லேட்

Periachocolate_pic

சிறார்க்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய 6 கதைகள், இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் உள்ளன. இவ்வுலகில் சாக்லேட் பிடிக்காத குழந்தைகள் உண்டா? அந்தச் சாக்லேட்டை அடிப்படையாக வைத்துக் கற்பனையைக் கலந்து, சுவையாக எழுதப்பட்டது தான், முதல் கதை. இது தான், இந்தப் புத்தகத்தின் தலைப்பும் கூட.

மனிதர்கள் யானை வழித்தடத்தில் கட்டிடங்களைக் கட்டி விட்டதால், வலசை போன யானைக் கூட்டத்தில், ஒரு யானைக்குட்டி வழி தவறி வந்து விடுகின்றது. அம்மாவைக் காணாமல், அந்தக் குட்டி யானை தவிக்கும் தவிப்பைக் ‘குட்டி யானை’ கதை சொல்கிறது. மனிதர்களின் நடவடிக்கைகளால் காட்டுயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தை, நெகிழ்ச்சியாகக் குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் கதை.  

8 வயது சுட்டி தனிஷ்கா எழுதிய, கற்பனை நிறைந்த சுவாரசியமான தேவதையின் கதையும், இதில் உள்ளது. குட்டி எறும்பு ஏன் சோகமாக இருந்தது? முனிவரிடம் அது என்ன பாடம் கற்றது? பயிற்சி வகுப்பில் சேராமல், அகிலா கட்டுரைப் போட்டியில், முதல் பரிசு பெற்றது எப்படி? என்ற கேள்விகளுக்கு விடைதெரிய வேண்டுமானால், குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்கக் கொடுங்கள். 6-12 வயது குழந்தைகளுக்கான புத்தகம். இது அமேசானில் கிண்டில் நூலாகவும் கிடைக்கின்றது.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்அப்பு சிவா
வெளியீடு:-நீலவால்குருவி, சென்னை-92 செல்:-9840603499
விலைரூ50/-
Share this: