சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை. தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான், உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன், அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான். சாகசப் பயணங்கள் நிரம்பிய விறுவிறுப்பான கதை.
சிறுவர்களை ஏன், எதற்கு, எப்படி என்பதைச் சிந்திக்க வைக்கும் விதமாக வித்தியாசமான முடிவை அமைத்திருக்கும் ஆசிரியர், பாராட்டுக்குரியவர்.
இந்நூல் 2013 ஆம் ஆண்டு, குழந்தை இலக்கியத்துக்கான விகடன் விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.. பிறந்த நாளில் குழந்தைகளுக்குப் பரிசளிக்க ஏற்ற புத்தகம்.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | ‘விழியன்’ (இயற்பெயர் உமாநாத் செல்வன்) |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) |
விலை | ரூ 40/- |