கி. ராஜநாராயணன்

KiRa photo

கி.ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுகின்றார்.  கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல், இவர் பிறந்த ஊர்.  தற்போது புதுச்சேரியில் வசிக்கிறார்.  இவர் எழுதிய ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்ற நாவலுக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.  சிறுகதை, குறுநாவல், நாவல், கரிசல் வட்டார வழக்கு அகராதி எனத் தமிழிலக்கியத்துக்கு, முக்கிய பங்காற்றியிருக்கிறார். சிறுவர்க்காக இவர் எழுதிய ‘பிஞ்சுகள்’ என்ற குறுநாவல், இலக்கிய சிந்தனை பரிசை வென்றது. 

Share this: