எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்து, ‘திசை தெரியாமல் ஊர்ந்து செல்லும் புழுவைப் போல இருந்த’, பிளிகி என்ற சிறுமியின் வாழ்வை அழகாக்கி, பட்டாம்பூச்சியாகப் பறக்க வைக்கிறார், பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர் மோராம்மா.
மோராம்மாவின் மூலம், பழங்கால ஆப்பிரிக்க மக்களின் துயரமிகுந்த கொத்தடிமை வாழ்வு பற்றியும், வெள்ளையரின் அடக்குமுறை பற்றியும் தெரிந்து கொள்கிறாள், பிளிகி. மேற்கு ஆப்பிரிக்கா நாடான சியரா லியோன் நாட்டின் பின்னணியில், கதை நடக்கிறது.
மக்கள் அடிமைகளாக்கப்பட்டு, மேற்கு ஆப்பிரிக்கா வழியாகவே பெருமளவு மக்கள் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு, அமெரிக்காவுக்கு, அனுப்பப்பட்டார்கள். அவர்களில் ஒரு பிரிவினர், அமெரிக்காவில் விடுதலை பெற்று நாடு திரும்பி, ஓர் இலவ மரத்தினடியில் விடுவிக்கப்படுகின்றனர். அதனால் சியாரோ லியோன் மக்களால், ‘பச்சை வைரம்’ என அம்மரம் கொண்டாடப்படுகின்றது.
இந்நாவல் மூலம் வெள்ளைக்காரர்களின் ஆதிக்க மனப்பான்மையால் ஆப்பிரிக்க மக்கள் அனுபவித்த கொடுமைகள், அமெரிக்காவில் சட்டபூர்வமாக நடத்தப்பட்ட அடிமை வியாபாரம், அவர்களது நீண்ட கால போராட்டங்களின் விளைவாகப் பெற்ற சுதந்திரம், ஆகியவை குறித்த வரலாற்றை, இளையோர் அறிந்து கொள்ளலாம்.
பதின்பருவத்தினருக்கான சிறந்த நாவல்.
வகை | நாவல் |
ஆசிரியர் | கொ.மா.கோ.இளங்கோ |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) |
விலை | ₹ 120/- |