பெருங்கனா – சிறார் நாவல்
சிறார் எழுத்தாளர் விழியனுடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளாகவே இருப்பர். கதையினூடாக அவர்களது வறுமையும், வாழ்க்கைப்பாடும், கல்வி கற்பதில் அவர்களுக்கிருக்கும் தடைகளும், அடிப்படை
[...]