ஓர் எறும்புக்கூட்டில் இருந்த ஒரு குட்டி எறும்புக்குக் கூட்டமாக இருக்கப் பிடிக்கவில்லை. ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்று ஒரு காவல் எறும்பு, அதற்கு எடுத்துச் சொல்லியும் அது கேட்கவில்லை.
தனியே சென்று ஒரு இலைக் கூட்டைக் கட்டிக் கொள்கிறது, குட்டி எறும்பு. ஒரு சிலந்தி அந்த எறும்பைப் பிடிக்க தொப்பென்று அதன் கூட்டில் குதிக்கின்றது.
சிலந்தியிடம் அந்தக் குட்டி எறும்பு மாட்டிக் கொண்டதா? முடிவில் என்ன ஆயிற்று? என்று தெரிந்து கொள்ள, கதையை வாங்கி வாசியுங்கள்.
இந்நூலின் ஆசிரியர் உதயசங்கர் அவர்களின் மகள் உ.நவீனா வரைந்த அழகழகான வண்ண ஓவியங்கள், இந்நூலை அலங்கரிக்கின்றன. வழவழப்புத் தாளில், குழந்தைகள் வாசிக்க ஏதுவாகப் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட நூல். அவசியம் வாங்கி, உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.
வகை | சிறுவர் கதை |
ஆசிரியர் | உதயசங்கர் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 30/- |