உமையவன்

Umayavan_photo

ஈரோடு சத்திய மங்கலத்தில் அமைந்த கெம்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த, இவரது இயற்பெயர், ப.ராமசாமி ஆகும். ‘உமையவன்’ என்ற புனை பெயரில் எழுதுகிறார்.    

இவர் சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி, புதுக்கவிதை, ஹைகூ, ஆன்மீகம் எனப் பல்வேறு தடங்களிலும் பயணிக்கிறார்.  இலக்கியப் பணிகளுக்காக உழவுக்கவிஞர் விருது, தமிழ் இலக்கிய மாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டு, இலக்கியச்சாரல் அமைப்பு, சிறுவர் இலக்கியப் பணிகளுக்காகக் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா விருதைக் கொடுத்தது. 

இவருடைய சிறார் நூல்கள், ‘மந்திரமலை’, ‘ஆகாய வீடு’, ‘பறக்கும் யானையும், பேசும் பூக்களும்’, ‘மழலை உலகு’, ‘குழலினிது யாழினிது’, ‘சிறுவர் நீதிக்கதைகள்’ ஆகியவை.  இவரது சிறுவர் நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஊரடங்கில் 15 குழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து, ‘அந்தியில் மலர்ந்த மொட்டுகள்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். நிவேதிதா பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

Share this: