கணினி பொறியியல் பட்டதாரியான ராஜலட்சுமி நாராயணசாமியின் சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. தற்போது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வசிக்கிறார்.
நாவல், சிறுகதை, குறுநாவல், கவிதை, சிறார் கதை எனப் பன்முகம் கொண்ட இவரது ஐந்து நாவல்கள், அச்சு வடிவம் பெற்றுள்ளன. ‘பூஞ்சிட்டு’ எனும் சிறார் மின்னிதழில், தொடர்ந்து சிறுவர்க்கான கதைகளை எழுதி வருகிறார். இவரது பல்வேறு புத்தகங்கள், அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ளன. ‘கரிமருந்து காதல்’ என்ற சிறுகதை, ‘ஸ்டோரிடெல்’ தளத்தில், ஆடியோ வடிவில் வெளியாகியுள்ளது.
‘மாயவனத்தில் ஓர் மந்திரப்பயணம்’, ‘நீர்க்குமிழி சோப்’, ‘கடோத்கஜன் கதை’ என்ற தலைப்புகளில், இவரது சிறார் நூல்களைப் பாரதி பதிப்பகம், சென்னை-92 வெளியிட்டுள்ளது.