உதயசங்கர்

Writer Udayshankar's photo

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், தமிழிலக்கிய சூழலில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்.  1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த இவர், இரயில்வே துறையில் பணி செய்து, ஓய்வு பெற்றவர்.

இதுவரை 12 சிறுகதைத் தொகுப்பு, 5 கவிதைத் தொகுப்பு, ஒரு குறுநாவல், 6 கட்டுரை, 19 சிறார் இலக்கிய நூல்கள், ஆகியவற்றை வெளியிட்டியிருக்கிறார்.  இது மட்டுமின்றி ஆங்கிலத்திலிருந்தும், மலையாளத்திலிருந்தும் அறுபதுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களை மொழிபெயர்த்திருக்கின்றார்.  

தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது,  கலை இலக்கியப் பெருமன்றம் சிறுவர் இலக்கிய விருது, விகடன் சிறுவர் இலக்கிய விருது, தமிழ்ப்பேராயம் அழ.வள்ளியப்பா விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கின்றார்.

Share this: