ம.ப.பெரியசாமித் தூரன் (1908 – 1987)

writer Thooran photo

கவிஞர் ம.ப.பெரியசாமித் தூரன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் பிறந்தவர்.  முதன்மை ஆசிரியராக இருந்து, அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றித் தமிழில் கலைக்களஞ்சியமும், குழந்தைகள் கலைக்களஞ்சியமும் தொகுக்கப்பட காரணமாக இருந்தவர் என்பதால், இவர் தமிழ் இலக்கிய வரலாற்றில், தனிப்பெரும் சாதனையாளராகப் போற்றப்படுகின்றார்.  பின்னால் வெளிவந்த பொது அறிவு சார்ந்த பல்லாயிரம் நூல்களுக்கு, இந்தக் கலைக்களஞ்சியமே, அடித்தளமாக அமைந்தது.

இவர் சிறார் இலக்கியத்திலும்,  கதை, நாவல், கவிதை எனச் சிறப்பான பங்களிப்பை நல்கியுள்ளார்.  அவர் எழுதிய முக்கியமான சிறுவர் கதைகள்,  ‘ஓலைக்கிளி’, ‘தம்பியின் திறமை’, ‘நாட்டிய ராணி’, ‘கடக்கிட்டி முடக்கிட்டி’, ‘மஞ்சள் முட்டை’, ‘நிலாப்பாட்டி’ ஆகியவை.      

‘மாயக்கள்ளன்’, ‘சூரப்புலி’, ‘கொல்லி மலைக்குள்ளன்’, ‘சங்ககிரிக் கோட்டை மர்மம்’, ‘தரங்கம்பாடித் தங்கப் புதையல்’  ஆகிய சிறுவர் நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.

குழந்தைகளுக்காக மூன்று கவிதை நூல்களையும், தூரன் படைத்துள்ளார்.  அவை ‘ஆனையும் பூனையும்’, ‘நல்ல நல்ல பாட்டு’, ‘மழலை அமுதம்’ என்பனவாகும்.

இவருடைய படைப்புகள் அனைத்தும், நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளதால் இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்.  அதற்கான இணைப்பு.

Share this: