வில்லி எலி

Villi_Eli_pic

நிலா பாலாடையால் செய்யப்பட்டது என்று தன் அம்மாவும் அப்பாவும் பேசியதைக் கேட்ட வில்லி எலி, நிலாவுக்குச் சென்று அது உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறது.  வழியில் காட்டு எலி, பறவை, அணில், பெருச்சாளி ஆகியவற்றைச் சந்தித்து நிலாவுக்கு எப்படிப் போவது என்று விசாரிக்கிறது.  அவைகளிடம் திருப்தியான பதில் அதற்குக் கிடைக்கவில்லை.    

முடிவில் ஆந்தையொன்றிடம் வில்லி எலி மாட்டிக் கொள்கிறது.  விழுங்கத் தயாரான ஆந்தையிடமிருந்து, வில்லி எலி எப்படித் தப்பித்தது? முடிவில் நிலாவை எட்டிப் பிடித்ததா? என்று தெரிந்து கொள்ள கதையை வாங்கிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள்.

1920 ஆம் ஆண்டு அல்டா தபோர் எழுதிய வில்லி எலி சித்திரக்கதை, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலாவில் கால் வைத்த அறிவியல் ஆய்வுகளுக்கு வித்திட்ட கதை.

ஆங்கிலம், தமிழ் (Bilingual) இரண்டு மொழியிலும் இருப்பதால், எந்த மொழியில் விருப்பமோ, அதில் வாசிக்கும் வசதியுண்டு.  கறுப்பு வெள்ளை படங்களுடன் கூடிய சுவாரசியமான சிறுவர் கதை.

வகை –மொழிபெயர்ப்புச் சிறுவர் கதை
ஆசிரியர் – ஆங்கிலம் தமிழாக்கம்அல்டா தபோர்  (Alta Tabor) கொ.மா.கோ.இளங்கோ
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை +91 8778073949
விலை₹ 30/-
Share this: