வாத்து ராஜா

Vathu raja_pic

அமுதாவும், கீர்த்தனாவும் நான்காம் வகுப்பு மாணவிகள். நெருங்கிய தோழிகளும் கூட. 

வேப்பம்பழத் தோலுக்குள் குச்சியை நுழைத்துச் சுண்டி எதிரில் வருபவரை அடிப்பது, சுடுகாயைச் சூடு பரக்கத் தேய்த்துச் சூடு வைப்பது, சுடுகாய்களைப் பொறுக்கிக் கொண்டு போய் ஆற்றில் எறிவது, பம்பரக் காய்களைப் பொறுக்கி வந்து விளையாடுவது எனக் கிராமப்புறப் பிள்ளைகளின் விளையாட்டுகளையும் இதில் சேர்த்திருப்பது ரசிக்க வைக்கிறது.

அமுதாவுக்கு வாத்து ராஜா பற்றிய கதையைப் பாட்டி சொல்கிறார்.  ஒரு அணிலும் இவர்களுடன் நட்பாகி, இந்தக் கதையை ஆர்வமுடன் கேட்கிறது. 

வானவன் என்ற மக்கு ராஜாவுக்கு வாத்து ராஜா என்று மக்கள் ரகசிய பட்டப் பெயர் வைத்துக் கிண்டல் செய்கிறார்கள்.  இது தெரிந்தவுடன் கோபமான ராஜா, நாட்டில் இருக்கும் எல்லா வாத்துக்களையும் கொன்று விட்டால், தம் பட்டப் பெயருக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று முடிவெடுக்கிறார்.

அரசரின் ஆணைப்படி காவலர்கள் வீடு வீடாகச் சோதனை செய்து எல்லா வாத்துக்களையும் கொல்கிறார்கள்.  சுந்தரி என்பவள் ஆசையாக வாத்து வளர்க்கிறாள்.  அரசரின் இந்த அறிவிப்பால் அவள் மிகுந்த கவலைக்குள்ளாகிறாள்.

தான் வளர்க்கும் வாத்துக்களின் மீது மையால் பூ வரைந்து, “இது வாத்து இல்லை; காட்டிலிருந்து பிடித்து வந்த வேறு ஒரு பறவை” என்று முதல் நாள் பறவைகளைக் கொல்ல வரும் காவலர்களை ஏமாற்றுகிறாள். மறுநாள் அவர்கள் வருவதாகச் சொல்லிச் செல்கிறார்கள்.  மறுநாள் என்ன நடந்தது?

அரசரின் இந்த முட்டாள்தனமான முடிவால் சுந்தரியின் வாத்துகளும் கொல்லப்பட்டனவா?  வாத்துகளைக் கொல்லவிடாமல் மறைத்தால் மரண தண்டனை என்ற அரசரின் அறிவிப்புப்படி, சுந்தரிக்குத் தண்டனை எதுவும் கிடைத்ததா? கதையின் முடிவு என்ன என்பதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

கறுப்பு வெள்ளை படங்களுடன் கூடிய சுவாரசியமான சிறுவர் நாவல்.

வகைசிறுவர் நாவல்.
ஆசிரியர்விஷ்ணுபுரம் சரவணன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18  (+91 8778073949)
விலை₹ 50/-
Share this: