சிறாரை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பதின்வயது சிறுவர்க்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாக அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது.
அந்த வரிசையில் அமெரிக்க எழுத்தாளர் ஷெல்டன் ஆலன் ஷெல் சில்வர்ஸ்டீன் எழுதிய ‘The Giving Tree’ என்ற உலகப் புகழ் பெற்ற கதையைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. இதனைத் தமிழாக்கம் செய்திருப்பவர், சிறார் எழுத்தாளர் திரு கொ.மா.கோ.இளங்கோ அவர்கள்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனிகல்லில் உள்ள ஒரு மலைக்கிராமத்து மக்களுக்குச் செம்மரம் வெட்டிக் கடத்துவது, முக்கிய தொழில். ஒரு காலத்தில் வேளாண்மையை நம்பியிருந்த மக்களை மரக்கடத்தலில் மும்மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டி, அவர்கள் வாழ்வைத் திசை திருப்புகிறது ஒரு கும்பல்.
அக்கான் என்ற சிறுவனின் தந்தையும், மரத்தை வெட்டிக் கடத்துகிறார். மரத்தூளைச் சேமிப்பதில் தந்தைக்கு உதவுகிறான் அக்கான். ஒரு நாள் வானொலியில் ‘உயிர் தரும் மரம்’ என்ற ஒரு நூலைப் பற்றி, உலகெங்கிலும் இருந்து பலர் தங்கள் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதைக் கேட்கிறான்.
அதைக் கேட்ட பிறகு, அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகின்றது. “எங்கள் ஊர் பள்ளிக்கு யாராவது இந்தப் புத்தகத்தை அனுப்புவீர்களா?” என்று வானொலியிடம் கத்திக் கேட்கிறான்.
அந்தப் புத்தகம் அவனுக்குக் கிடைத்ததா? வாசிக்காத புத்தகத்தின் வாசனையை, அவன் கைகளில் நுகர்ந்து மகிழ்ந்தானா? என்றறிய அவசியம் இம்மின்னூலை வாங்கி வாசியுங்கள்.
வகை – மின்னூல் | இளையோர் குறுநாவல் மின்னூல் |
ஆசிரியர் – தமிழாக்கம்:- | ஷெல்டன் ஆலன் ஷெல் சில்வர்ஸ்டீன் கொ.மா.கோ.இளங்கோ |
வெளியீடு:- இணைப்பு:- | ஓங்கில் கூட்டம் அமைப்பு https://www.amazon.in/dp/B096G43TRS |
விலை | ரூ49/- |