குட்டிக் கடற்கன்னி – சிறுவர் நாவல்

Kutti_kadarkanni_pic

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen)என்பவர், டென்மார்க்கைச் சேர்ந்த புகழ் பெற்ற சிறுவர் எழுத்தாளர். இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 தான், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப் படுகின்றது. இவருடைய தேவதைக்கதைகள், உலகம் முழுக்கப் பிரபலம் ஆனவை.  இவருடைய படைப்புகள் 125 க்கு மேலான, மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இவருடைய சிறந்த படைப்புகளுள், ‘குட்டிக் கடற்கன்னி’யும் ஒன்று. இது 1837 ல் வெளியான பிறகு, இசைநாடகம், அனிமேஷன், திரைப்படம் என பல வடிவங்களில், மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கதையின் நினைவாகக் கோபன்ஹேகன் துறைமுகத்தில், ஒரு பாறையின் மீது கடற்கன்னி அமர்ந்து இருப்பது போலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

குட்டிக் கடற்கன்னி கடலில் இருக்கும் வரை, 300 ஆண்டுகள் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ முடியும். ஆனால் அவளோ ஒரு இளவரசன் மீது காதல் கொள்கிறாள். அவன் மீது கொண்ட களங்கமில்லாத தூய அன்பால், மரணமில்லா வாழ்வைத் துறந்து, கரையேறுகிறாள்.

கரைக்குச் செல்ல, அவளுடலில் இருக்கும் மீனின் வாலுக்குப் பதிலாகக் கால்கள் தேவைப்படுகின்றன. தன் இனிமையான குரலைப் பறிகொடுத்து, மந்திரவாதியிடம் கால்களைப் பெறுகின்றாள். பேசவும், பாடவும் முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.

தூய்மையான அன்புக்காக இவ்வளவு துன்பங்களையும் தாங்கிக் கொண்டு, கால்களைப் பெற்றுக் கரைக்குச் செல்கிறாள். அவள் ஆசைப்பட்டபடி, இளவரசன் அவளை மணந்தானா? அவள் ஆசை நிறைவேறியதா? என்பதைத் தெரிந்து கொள்ள, கதையை வாங்கி வாசியுங்கள். 9 வயதுக்கு மேற்பட்டோர் வாசிக்கக் கூடிய நாவல்.

வகைசிறுவர் மொழிபெயர்ப்பு நாவல்
ஆசிரியர் – ஆங்கில மூலம் தமிழாக்கம்ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் தமிழ்ச்செல்வன்
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89 செல் 91765 49991
விலைரூ 50/-
Share this: