வானத்துடன் டூ

Vanathudan_pic

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன.

இந்நூலின் தலைப்பான ‘வானத்துடன் டூ’ என்பது தான், முதல் கதை. துர்கா வாழ்ந்த ஊரில், ரொம்ப நாளாக மழையே பெய்யவில்லை. குளம் காய்ந்து கிடைக்கிறது. அவள் தோழி தனம், கொடும்பாவி கட்டினால் மழை வரும் என்கிறாள்.

ஒரு மனிதன் கை கால்களை விரித்தபடி, மண்ணில் படுத்துக் கிடப்பது போல், மண்ணைக் குவித்துச் செய்வது தான், கொடும்பாவி. துர்கா 10 நாட்களாகத் தொடர்ந்து செய்தும், மழை வரவில்லை. அன்றைக்கு மழை வராவிட்டால், நிச்சயம் வானத்துடன் டூ விடுவேன் என்கிறாள். அதற்குப் பயந்து, வானம் அன்றிரவு நல்ல மழை பெய்கிறது. இக்கதை குழந்தைமையின் வெகுளித்தனத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.

இரண்டு சக்கர வாகனத்தில் தந்தையுடன் செல்லும் ஆகாஷ், போக்குவரத்து சிக்னலில் இருக்கும் விளக்குகளைக் கிளிகளாக நினைத்துப் பேசுவதை, நம்ப முடியவில்லை.   

சோம்பேறி பூதம், எலி வாசனை இரண்டும் குழந்தைகளைக் கவரும் வேடிக்கை கதைகள். வேட்டைக்குச் செல்லும் ராஜா உயிர்களைக் கொல்லக் கூடாது என்று உணர்ந்து, வேட்டையைக் கைவிடுவதாக எழுதியிருப்பது, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தைக் குழந்தைகள் மனதில் பதியச் செய்யும்.     

கண்டுபிடி கண்டுபிடி’ என்பது, குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டும் கதை. கிடைக்கும் சாவியைக் கொண்டு, அதன் வண்டியைக் கண்டுபிடிப்பது புதுமையான ஐடியா!

‘யானைக்கு என்னாச்சு?’ என்பது, ‘யானை ஏன் ஆடாமல் அசையாமல் படுத்துக் கிடந்தது?’ என்ற இரகசியத்தைச் சுவாரசியமாகச் சொல்லும் கதை. எல்லாமே சிறுவர்கள் எளிதாக வாசிக்க கூடிய சின்னச் சின்னக் கதைகள். எளிமையான நடை. ஆசிரியருக்குப் பாராட்டுகள்!

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்விஷ்ணுபுரம் சரவணன்
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89. செல் +91 91765 49991
விலைரூ 50/-
Share this: