ஒரு தேன் கூட்டில் இருந்து முதன் முதலாக ஒரு குட்டித்தேனீ தேன் சேகரிக்க வெளியே போகின்றது. மாந்தளிரிடம் போய்த் தேன் கேட்கின்றது. பின் மலராத மொட்டுகளிடம் போய்த் தேன் கேட்கிறது.
தேனீக்கு இறுதியில் தேன் கிடைத்ததா? அதன் அனுபவங்கள் என்ன? என்பதைச் சுவையாகச் சொல்லும் கதை.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் மகள் உ.நவீனா வரைந்த ஓவியங்கள் மிகச் சிறப்பு. வாசிப்பின் ஆரம்ப நிலையில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கவரும் விதமாக, வண்ணப் படங்களுடன், வழ வழ தாளில், குறைவான வார்த்தைகளுடன் எழுதப்பட்ட சித்திரக்கதை.
குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிப்பின்பம் அளிப்பீர்!
வகை | சிறுவர் கதை |
ஆசிரியர் | உதயசங்கர் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சிலரன், சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 30/- |