தற்காலச் சிறார் எழுத்தாளர்கள்

Tharkala_pic

இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி அவர்கள், சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து, தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார்.

தமிழில் சிறார் எழுத்தாளர் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றார்கள் என்றும், சிறார் இலக்கியம் அழியும் நிலையிலிருக்கிறதென்றும், சிலர் கூறும் கருத்துகள் உண்மையல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக, இந்நூலைத் தாம் எழுதியதாக முன்னுரையில் கூறியிருக்கின்றார் ஆசிரியர்.

இந்நூலில் தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா என்ற மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 102 சிறார் எழுத்தாளர்களின் பெயர்களை, (1950 களில் எழுதத் துவங்கிய ஜோதிர்லதா கிரிஜா முதல், தற்கால இளம் எழுத்தாளர் உமையவன் வரை) அரிதின் முயன்று தேடித் தொகுத்துள்ளார். இந்த எழுத்தாளர்களின் வாழ்க்கை குறித்த விபரங்களையும், அவர்கள் படைப்புகள் குறித்த விரிவான செய்திகளையும், இந்நூலில் நாம் அறிந்து கொள்ள முடிவது சிறப்பு.

சிறார் எழுத்தாளர்கள் பற்றி அழ.வள்ளியப்பா வெளியிட்ட ‘குழந்தை எழுத்தாளர் யார் எவர்?’ என்ற நூலின் தொடர்ச்சியாக, இந்நூல் அமைந்துள்ளது. எனவே தமிழில் சிறார் இலக்கிய வரலாறு குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கும், ஆய்வு மாணவர்க்கும், இது ஓர் ஆவணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

வகைகட்டுரை
ஆசிரியர்ஆர்.வி.பதி
வெளியீடுநிவேதிதா பதிப்பகம்,சென்னை-92 +91 8939387276/ 8939387296
விலைரூ 200/-
Share this: